ETV Bharat / state

என்னவெல்லாம் செய்துள்ளோம் பாருங்கள்: தகவல்களை வெளியிட்ட மாநகராட்சி நிர்வாகம்

author img

By

Published : Feb 22, 2020, 3:31 PM IST

சென்னை: மாநகர நிர்வாகத்தினால் என்னவெல்லாம் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த புகைப்படங்களுடன் கூடிய தகவல்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

திட்டப்பணிகள் குறித்து தகவல் வெளியிட்ட மாநகராட்சி

சென்னையில் விரைவில் நகர்புறப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காலகட்டமும் நெருங்கிவருகின்றது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தால் என்னவெல்லாம் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும், அதன் செலவுகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த புகைப்படங்களுடன், மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தகவல்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், மழை ஒன்றே பூமிக்கு வான் தருகின்ற வாழ்வாதாரம். அத்தகைய மழைநீரை சேமிக்க அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அவசியம் எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சலையோர மழைநீர் சேகரிப்பு மையங்கள், உரை கிணறுகள், பயன்பாடற்ற சமுதாய கிணறுகளைக் கண்டறிந்து புனரமைப்புச் செய்தல் போன்ற பணிகள் செய்வதில் இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னை மாநகராட்சி திகழ்கிறது.

இந்தியாவில் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பூங்கா, சிறுவர்களுக்கு போக்குவரத்து, சமிக்ஞைகள் அடங்கிய பூங்கா, பசுமை பரப்பை அதிகரிக்க அம்ருத் திட்டம், புயல், மழை, வெள்ளத்திலும் நம் மண்ணை காக்க அடர் காடுகள் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

சீர்மிகு நகரம் திட்டத்தில் டி.நகரில் உலகத்தரம் வாய்ந்த நடைபாதை வளாகம், நவீன வசதிகளுடன் சாலைகளை மறு சீரமைத்தல், பள்ளிகளில் உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு வகுப்புகள் என மாநகராட்சி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டு பெருமளவு மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்று வடிநிலப்பகுதிகளில் 763 கிமீ தொலைவிற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் அட்சய பாத்திரா திட்டம்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.