சென்னையில் சுமார் 281 பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. தற்போது, தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேறி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
தற்போது, 2021-22 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. சேர்க்கை தொடங்கி ஏறத்தாழ ஒரு மாதம் கூட முடியாத நிலையில் ஒரு லட்சத்து ஆயிரத்து 757 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தம் 281 மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை, நேற்று (ஜூலை19) நிலவரப்படி ஒரு லட்சத்து ஆயிரத்து 757 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2020-21 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மொத்த மாணவர்கள் 27 ஆயிரத்து 311 மட்டுமே.
இதில், தனியார், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறிய சுமார் 19 ஆயிரத்து 38 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழிக்கல்வி - அமைச்சர் கயல்விழி