சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது.
கடைகளிலும் மக்கும், மக்காத குப்பைகளை எளிதில் தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகளைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனக் கடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 94,523 கடைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் 69,001 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சராசரியாக 73% கடைகளில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களிடம் குப்பைத் தொட்டிகளை உடனடியாக வைக்க அறிவுறுத்தப்பட்டு ரூ.1,18,800 வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் தான் அதிமுகவை மீட்க வேண்டும்? - கரிசனம் காட்டும் தமிழன் பிரசன்னா..!