ETV Bharat / state

Chennai Corporation: நகர விற்பனைக் குழு உறுப்பினர் தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு!

சென்னை மாநகராட்சியில் நகர விற்பனைக் குழு அமைக்க தெருவோர வியாபாரிகளிலிருந்து 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 15 மண்டலங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

election
தேர்தல்
author img

By

Published : Apr 27, 2023, 1:32 PM IST

நகர விற்பனைக் குழுவிற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் தீவிரம்!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர விற்பனைக் குழு அமைக்க தெருவோர வியாபாரிகளிலிருந்து 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒரு மண்டலத்துக்கு 6 நபர்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் இருந்தது.ஆனால் தற்போது உயர்நீதிமன்ற ஆணைப்படி மொத்தம் 15 மண்டலருக்கும் சேர்த்து 6 நபர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் 16 பெண்கள் உள்பட 53 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் 11 பேர் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள், 5 பேர் இதர பிற்பட்ட வகுப்பினர், 11 பேர் சிறுபான்மை இனத்தவர், 6 பேர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 12 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள்.

15 மண்டலங்களில் இந்த தேர்தல் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு வாக்குச்சாவடி மையத்தில் ஒருவருக்கு 6 வாக்குச் சீட்டு அளிப்பார்கள். அவர்கள் அந்த 6 வாக்குச் சீட்டிலும் வாக்களித்து வாக்கு பெட்டியில் போடுவார்கள்.

இந்த தேர்தலில் மாநகராட்சி கணக்குப்படி மொத்தம் 38,588 நபர்கள் வாக்கு செலுத்த தகுதியானவர்களாக இருக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் நபர்களுக்கு வாக்களிக்க அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கப்படாதவர்களுக்கு ஆதார் அட்டை உள்ளிட்ட ஐந்து அடையாள அட்டைகளை எடுத்து வந்து வாக்கு செலுத்தலாம்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் வேட்பாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன் பின்னர் நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, நாளை மாலை அல்லது இரவுக்குள் அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் வியாபாரிகளின் கோரிக்கை பிரச்னைகளை மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். மொத்தம் 15 பேர் கொண்ட குழுவில் ஆறு நபர்களை இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். மீதம் உள்ள 6 நபர்களை மாநகராட்சி மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மருத்துவ அதிகாரி ஒருவரும், காவல்துறை அதிகாரி 2 நபர்களும், உள்ளூர் அதிகாரி ஒருவரும், வணிக சங்க உறுப்பினர் ஒருவரும், தன்னார்வல அமைப்பை சார்ந்தவர்கள் 2 நபர்களும், குடியிருப்பு நலச்சங்கம் சார்ந்தவர் ஒருவரும் என மொத்தம் 6 நபர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் விசிக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.