சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் சுமார் ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இவர்களை தனியார் ஒப்பந்தம் மூலம் வேலை செய்யும்படி ஆலந்தூர் மண்டல மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதை ஏற்காத துப்புரவுப் பணியாளர்கள் தனியார் ஒப்பந்தம் மூலம் பணி செய்ய மறுத்து, தங்களுக்கு நிரந்திர பணி வேண்டும் என அலுவலர்களிடம் வலியுறுத்தினர். ஆனால் அலுவலர்கள் அவர்களை வேலையை விட்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால், மிகுந்த வேதனையடைந்த துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை வேண்டும். ஒப்பந்தம் மூலம் வேலை செய்ய முடியாது எனக் கூறி கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ஆலந்தூர் போலீசார் மறியலில் ஈடுப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவுள்ள கேரளா!