ETV Bharat / state

மயான ஊழியர் கொலை - பெண் உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு - 4 பேர் சிறையில் அடைப்பு

சென்னை: மூலகொத்தளத்தில் மயான ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மயான ஊழியர் அடித்து கொலை - பெண் உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு

author img

By

Published : Oct 9, 2020, 1:20 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டை அடுத்த மூலகொத்தளம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர். ஜெகன்(எ) ஜெகன்நாதன் (45). இவர் மூலகொத்தளம் சுடுகாட்டில் மாநகராட்சி மயான ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்த இவர் தாய் மற்றும் இரண்டு மகள்களுடன் செங்குன்றம் கூனிமேடு பகுதியில் வசித்து வந்தார்.

குடிப்பழக்கம் இருப்பதால் பலரிடம் வட்டிக்கு பணம் வங்கி செலவு செய்துள்ளார். அவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கடந்த வாரம் லோன் வாங்கி ஒரு சிலருக்கு கொடுத்துள்ளார். இதில் உடன் வேலை பார்த்த சசி, வேலுவுக்கு ஆகியோருக்கு பணம் தரவில்லை.

இதனால் ஆட்டோவில் சென்று செங்குன்றத்திலிருந்து ஜெகனை கடத்தி வந்து மூலகொத்தளத்தில் உள்ள வேலு வீட்டில் அடைத்து வைத்து பணம் கேட்டு அடித்துள்ளனர்.

இதில் அடிதாங்காமல் ஜெகன் கதறவே விட்டு சென்றுள்ளனர். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது ஜெகன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டுமென்று உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மூலகொத்தளம் ராமதாஸ் நகரை சேர்ந்த சசி, வடிவேல், சித்ரா, 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சத்தியா, வேலு ஆகியோரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.