கரோனா வைரஸ் தமிழ்நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, சென்னையில் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க. நகர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது.
இதுவரை சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 80 ஆயிரத்து 961 நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 64 ஆயிரத்து 36 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அப்பட்டியல் குறித்து கீழ்கண்ட புகைப்படத்தில் தெரிந்துகொள்ளலாம்.
நாளுக்கு நாள் நோய்த் தொற்று குறைந்து வரும் நிலையில் சென்னையில் 10 ஆயிரத்து 660 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 1,292 நபர்களுக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 1,318 நபர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா நிதி குறித்து வெளிப்படையாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!