ETV Bharat / state

93 வயதான முதியவருக்கு ரோபோட்டிக் மூலம் இதய அறுவை சிகிச்சை: அப்போலோ சாதனை! - சென்னை அப்போலோவில் ரோபோட்டிக் மூலம் இதய அறுவை சிகிச்சை

சென்னை அப்போலோ மருத்துவமனையில் 93 வயதான முதியவருக்கு ரோபோட்டிக் உதவியுடன் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

இதய அறுவை சிகிச்சை நிபுணர் யூசுப்
இதய அறுவை சிகிச்சை நிபுணர் யூசுப்
author img

By

Published : Apr 12, 2022, 7:30 PM IST

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் ரோபோட்டிக் உதவியுடன் 93 வயது நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படுவது இந்தியாவிலேயே இதுவே முதல் முறையாகும். அந்த நோயாளிக்கு ரோபோ உதவியுடனான குறைந்தபட்ச ஊடுருவல் கரோனரி தமனி மாற்றுப்பாதை ஒட்டு (Coronary Artery Bypass Graft -CABG) அறுவை சிகிச்சை செய்து மருத்துவர் யூசுப் மற்றும் குழுவினர் சாதனைப்படைத்துள்ளனர்.

இதயநோய் அறுவை சிகிச்சை ரோபோடிக் மூலம் கடந்த சில மாதங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட பல நோயாளிகளுக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட 10 நோயாளிகளுக்கும் வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.

அப்போலோ மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் யூசுப் கூறும்போது, "ரோபோட்டிக் இதய அறுவை சிகிச்சை மார்புப் பிளவு அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறது. மேலும் விரைவாக குணமடைய உதவுகிறது. ரோபோடிக் அசிஸ்டு சிஏபிஜி (CABG) என்பது இப்போது கிடைக்கக்கூடிய மிகக் குறைவான ஊடுருவல் இதய அறுவை சிகிச்சை முறையாகும்.

இதய அறுவை சிகிச்சை நிபுணர் யூசுப்

2 வாரங்களில் முழு இயல்பு வாழ்க்கை: ரோபோட்டிக் இதய அறுவை சிகிச்சையில் மார்புப் பகுதியில் சிறிய துளைகளை உருவாக்கி, அதன் மூலம் டாவின்சி ரோபோடிக் அமைப்பின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 93 வயது முதியவருக்கு மேற்கொள்ளும் பாேது தோள் பகுதிகள் சுருக்கமாக இருந்தது சவாலாக அமைந்தது. 70 வயதிற்கு மேல் கடந்தவர்கள் அதிக நாட்கள் வாழ்வார்கள் என்பது இயல்பானது.

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மார்புப் பகுதியில் இரண்டு தமனிகள் பயன்படுத்தப்படுவதால் பெரும்பாலான நோயாளிகளுக்கு கால்களில் இருந்து எதுவும் எடுக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. மிகச் சிறிய அளவிலேயே இரத்த இழப்பு, குறைவான வலி மற்றும் விரைவாக குணமடைதல் ஆகியவை நோயாளிகளுக்கு சிறந்த வசதியை ஏற்படுத்துகிறது.

இந்த ரோபோடிக் சிகிச்சை முறையில் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய காலம் 2 முதல் 3 நாட்கள் மட்டுமே. 2 அல்லது 3 வாரங்களில் நோயாளி முழு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். திறந்த முறையிலான சிஏபிஜி சிகிச்சையில் முழு இயல்பு நிலை செயல்பாட்டிற்குத் திரும்ப 2 அல்லது 3 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் கூட ஆகக் கூடும். ஆனால், இந்த தனித்துவமான ரோபோடிக் செயல்முறை உலகெங்கிலும் மிகச்சில மையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் மற்றும் வயதான நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த அறுவை சிகிச்சை முறையாகும்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா நோயாளிகள் ஒருவரும் இல்லை; பூஜ்ஜிய எண்ணிக்கையை சாதித்துக்காட்டிய சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.