தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் ஆயிரத்தை கடந்துவருகிறது.
குறிப்பாக அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இதனால் சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் விழுக்காடு ஆறிலிருந்து ஏழாக உயர்ந்துள்ளது.
இந்தப் பரவலைக் குறைப்பதற்கு அப்பகுதி முழுவதும் மாநகராட்சி சார்பில் அதிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டும், கரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்திவருகின்றனர்.
சென்னையில் இதுவரை மொத்தமாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 601 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மூன்றாயிரத்து 166 பேர் இந்தத் தொற்றினால் உயிரிழந்தனர்.
மண்டல வாரியாக சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
கோடம்பாக்கம் - 1206 பேர்
அண்ணா நகர் - 1190 பேர்
ராயபுரம் - 863 பேர்
தேனாம்பேட்டை - 1003 பேர்
தண்டையார்பேட்டை - 662 பேர்
திரு.வி.க. நகர் - 868 பேர்
அடையாறு - 942 பேர்
வளசரவாக்கம் - 817 பேர்
அம்பத்தூர் - 752 பேர்
திருவொற்றியூர் - 230 பேர்
மாதவரம் - 396 பேர்
ஆலந்தூர் - 617 பேர்
சோழிங்கநல்லூர் - 347 பேர்
பெருங்குடி - 510 பேர்
மணலி - 179 பேர்