அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சகாயம், 'சகாயம் அரசியல் பேரவை' என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்தப் பேரவையின் சார்பில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 36 தொகுதிகளில் வேட்பாளர்கள் களம்கண்டனர்.
இவர்களுக்காக அவர் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், கரோனா அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து சகாயம் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.