கரோனா பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இணையாக, தமிழ்நாட்டிலும் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "(09.05.2020) நேற்று வரை ஆறாயிரத்து ஒன்பதாக இருந்த கரோனா பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 535ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 526 பேரில், அதிகபட்சமாக சென்னையில் 279 பேரும், விழுப்புரத்தில் 67 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்குவதற்காக வந்தபோது தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இன்று நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 44 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து, தற்போது வரை 2 லட்சத்து 19 ஆயிரத்து 406 பேரிடம் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதாக" அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சி சீமான் மீது தேசதுரோக வழக்கு