சென்னை, புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையர் ஜெயராமன், ஆயுதப்படை துணை ஆணையர் சவுந்தரராஜன் கலந்துகொண்டு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கினர். இதில், பொது சுகாதாரத் துறை மருத்துவர் சாந்தா வைரஸ் தடுப்பு குறித்து விளக்கினார்.
காவலர் பணியிலிருந்து வீட்டுக்கு வருபவர்கள் எவ்வாறு கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும், கை கால் கழுவுதல், பலமுறை சோப்பு போட்டுக் கழுவுதல் மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் குறித்தும் விளக்கினார். காவலர்களும் கொரோனா குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
மேலும், அனைத்து ஆயுதப்படை காவலர்களும் பயன்பெறும் வகையில் இந்த விழிப்புணர்வு முகாம் ஒரு வாரம் நடைபெறும் என துணை ஆணையர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பட எந்தவொரு திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்த முடியாது" முதலமைச்சர் திட்டவட்டம்!