கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா உள்பட ஐந்து நாடுகளிலிருந்து வரும் பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (30). இவரது கணவர் ஹாங்காங்கில் பணிபுரிந்து வருகிறார்.
அவரைப் பார்க்க, கடந்த வாரம் ஹாங்காங் சென்ற சித்ரா நேற்று நள்ளிரவு சென்னைக்கு திரும்பினார். பின்னர், அங்கிருந்து வீட்டிற்க்கு சென்ற சித்ராவுக்கு காய்ச்சல், இருமல்,சளி, மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பிரத்யேக உடைகள் அணிவித்து.108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கென, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தனி அறையில், சித்ராவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்புக்கு பின்னர் அவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது உறுதிப்படுத்தப்படும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :பரமக்குடி, முதுகுளத்தூர் ஒன்றியக் குழு தேர்தலில் அதிமுகவினர் வெற்றி!