தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஏர் இந்தியா விமானம் மூலம் 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.
தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.