சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜூலை 16) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 778 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், இரண்டாயிரத்து 312 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 44 லட்சத்து ஏழாயிரத்து 643 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 25 லட்சத்து 31 ஆயிரத்து 118 நபர்கள் கரோனா தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
குணமடைந்தவர்கள்
தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 29 ஆயிரத்து 950 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகள் குணமடைந்த இரண்டாயிரத்து 986 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 68 ஆயிரத்து 236ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள்
இன்று 46 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 652 என உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு தொடரும்