சென்னையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) வேகமாகப் பரவிவருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மட்டும் 1,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீநுண்மிப் பரவலைத் தடுக்க மாநகராட்சியும், மாநில அரசும் புதிய புதிய யுக்தியைக் கையாளுகிறது. இருப்பினும் கரோனா தொற்று பரவல் குறையாமல் உள்ளது.
சென்னையின் 15 மண்டலங்களில் 10இல் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தீநுண்மி உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது மண்டல வாரியாகப் பட்டியல் ஒன்றினை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
ராயபுரம் | 5216 பேர் |
திரு.வி.க. நகர் | 2922 பேர் |
வளசரவாக்கம் | 1395 பேர் |
தண்டையார்பேட்டை | 4082 பேர் |
தேனாம்பேட்டை | 3844 பேர் |
அம்பத்தூர் | 1105 பேர் |
கோடம்பாக்கம் | 3409 பேர் |
திருவொற்றியூர் | 1171 பேர் |
அடையாறு | 1809 பேர் |
அண்ணா நகர் | 3150 பேர் |
மாதவரம் | 854 பேர் |
மணலி | 448 பேர் |
சோழிங்கநல்லூர் | 586 பேர் |
பெருங்குடி | 594 பேர் |
ஆலந்தூர் | 624 பேர் |
என 15 மண்டலங்களில் 31,896 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16,671 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது மக்களுக்கு ஆறுதல் தருகிறது.
மேலும் இந்த 31,896 நபர்களில் 59.96 விழுக்காட்டினர் ஆண்களும் 40.03 விழுக்காட்டினர் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 44 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!