தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 22) மொத்தம் இரண்டாயிரத்து 710 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று (ஜூன் 22) ஒரே நாளில் மொத்தம் 37 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஆயிரத்து 487 பேருக்கு புதிதாக இன்று (ஜூன் 22) தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தவிர, அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் உள்ள 87 ஆய்வகங்களில், மொத்தம் 26 ஆயிரத்து 592 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில், இரண்டாயிரத்து 710 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் இருந்த இரண்டாயிரத்து 652 பேருக்கும்; வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒன்பது லட்சத்து 19 ஆயிரத்து 204 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 62 ஆயிரத்து 87 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில் ஆயிரத்து 358 பேர் குணமடைந்து இன்று (ஜூன் 22) வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 34 ஆயிரத்து 112 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில் சிகிச்சைப் பலனின்றி 37 பேர் இன்று (ஜூன் 22) இறந்துள்ளதை அடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :
சென்னை மாவட்டம் - 42,752
செங்கல்பட்டு மாவட்டம் - 3,872
திருவள்ளூர் மாவட்டம் - 2,645
காஞ்சிபுரம் மாவட்டம் - 1215
திருவண்ணாமலை மாவட்டம் -1199
கடலூர் மாவட்டம் - 863
மதுரை மாவட்டம் - 849
திருநெல்வேலி மாவட்டம் - 644
தூத்துக்குடி மாவட்டம் - 639
விழுப்புரம் மாவட்டம் - 606
ராணிப்பேட்டை மாவட்டம் - 525
வேலூர் மாவட்டம் - 491
அரியலூர் மாவட்டம் - 432
கள்ளக்குறிச்சி மாவட்டம் - 395
சேலம் மாவட்டம் - 352
ராமநாதபுரம் மாவட்டம் - 317
திண்டுக்கல் மாவட்டம் - 312
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 310
தஞ்சாவூர் மாவட்டம் - 308
கோயம்புத்தூர் மாவட்டம் - 280
தென்காசி மாவட்டம் - 261
தேனி மாவட்டம் - 236
திருவாரூர் மாவட்டம் - 231
நாகப்பட்டினம் மாவட்டம் - 219
விருதுநகர் மாவட்டம் - 208
கன்னியாகுமரி மாவட்டம் - 178
பெரம்பலூர் மாவட்டம் -151
திருப்பூர் மாவட்டம் - 122
கரூர் மாவட்டம் -119
சிவகங்கை மாவட்டம் - 103
நாமக்கல் மாவட்டம் - 89
புதுக்கோட்டை மாவட்டம் - 86
ஈரோடு மாவட்டம் - 83
திருப்பத்தூர் மாவட்டம் - 83
கிருஷ்ணகிரி மாவட்டம் - 72
தருமபுரி மாவட்டம் - 32
நீலகிரி மாவட்டம் - 31
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 265
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 151
ரயில் மூலம் வந்தவர்கள்: 401
இதையும் படிங்க : 'அதிர்ச்சியும் ஏமாற்றமும் தருகிறது எனது சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு' - கௌசல்யா