கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்களை பொதுத்தேர்வு மையங்களில் அனுமதிக்காமல், சிறப்புத் தேர்வு மையங்கள் அமைத்து, அங்கு அவர்களுக்கு தேர்வு நடத்த அரசுத் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு, அதே பகுதிகளில் 115 சிறப்புத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா அறிவித்துள்ளார். மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு சென்றுவர வசதியாக 41 வழித்தடங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...தலைமை செயலகத்துக்கு அருகே பொதுமக்கள் முகக் கவசமின்றி நடைப்பயிற்சி!