நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் 21 நாள்களுக்கு மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆறாவது நாளான இன்று, சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் காலை முதலே வாகன நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதேபோன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிக அளவு நடமாட்டம் காணப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 67ஆக உயர்ந்துள்ள நிலையில், மக்கள் வெளியே நடமாடுவது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 என மத்திய சுகாதாரத் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 100 ஆகவும் உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி - முதலமைச்சர் பழனிசாமி