ETV Bharat / state

நிவர் புயல் பாதுகாப்பு மையங்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதம் - நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்

சென்னை : நிவர் புயல் பாதுகாப்பு மையங்களில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

corona
corona
author img

By

Published : Nov 24, 2020, 4:06 PM IST

நிவர் புயலை எதிர் கொள்வது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர், அனைத்து மாவட்டத் துணை இயக்குனர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நிவர் புயல் உருவாகியுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் மின்சார வசதிக்காக ஜெனரேட்டர்களையும், டீசலையும் கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

நிவர் புயல், நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், கடலோரப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் மின்சாரத் துண்டிப்பு ஏற்படக்கூடும் என்பதால், டார்ச் லைட், செல்போஃன், சார்ஜர் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். பேரிடர் நேரத்தில் பணிபுரிவதற்கு ஏதுவாக மருத்துவர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பள்ளத்தாக்கான பகுதிகள், தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகள், புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள புயல் நிவாரண மையங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கிருமி நாசினி தெளித்தல், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை சுத்தமாகக் கழுவுதல் போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் அனைவரையும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

புயல் நிவாரண மையங்களில் உணவின் தரத்தினை ஆய்வு செய்து தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வருவாய், இன்ன பிற துறைகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து குடிநீரில் குளோரின் கலப்பது, திடக்கழிவு மேலாண்மை, கிருமி நாசினி தெளித்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும்.

தேவையான அளவு ஆக்சிஜன் சிலிண்டர், மருந்து மாத்திரைகள், குடிநீர் வசதி தடையின்றி கிடைக்க சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்களும் பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும். நடமாடும் மருத்துவக்குழு வாகனம் அனைத்து ஒன்றியத்திலும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

மாவட்டப் பேரிடர் மேலாண்மைத்துறையினரால் அளிக்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து, மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். பொதுப்பணித்துறையினரிடம் அணைகளைத் திறப்பது குறித்து கேட்டறிந்து எந்த உயிர் இழப்பும் ஏற்படாத வகையில் நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.