சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடங்கி வைத்த மாநகரட்சி ஆணையர் பிரகாஷ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "சென்னையில் நாள்தோறும் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது, இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் பணியில் 35 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர், அவர்களுக்கு 1 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
கேரளா, பஞ்சாப், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் இருந்து சென்னை வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம். இ-பாஸ் முறை நாளுக்கு நாள் மாறுபடும், இதற்காக சோதனைச்சாவடிகள் தனியாக அமைக்கப்படாது. கரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் 39 ஆயிரம் தெருக்கள் இருக்கும் நிலையில், 10 தெருக்களில் தான், கட்டுபாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
மாஸ்க் ப்ளீஸ்
கரோனா தடுப்பு மருந்தால் நோய் பரவல் குறையும். அதேவேளையில், மக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும். இதுவரை, மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. " என தெரிவித்தார்.