இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அவர், "தமிழ்நாட்டில் ஜூலை 2ஆம் தேதி 4 ஆயிரத்து 343 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 94 ஆயிரத்து 49லிருந்து 98 ஆயிரத்து 392ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் மட்டும் ஜூலை 2ஆம் தேதி 2ஆயிரத்து 27பேரும் மொத்தமாக இதுவரை 62 ஆயிரத்து 598 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஜூலை 2ஆம் தேதி 57ஆகவும், மொத்தமாக இதுவரை 1,321ஆகவும் உள்ளது.
மேலும் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 95 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 21ஆக உள்ளது" எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் 'தமிழ்நாட்டில் வீடுவீடாகச் சென்று தினமும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. அதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் விஜய பாஸ்கர் திடீர் ஆய்வு!