கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் அதிதீவிரமாக உள்ளது. தினமும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவருகிறது. நேற்று ( ஜூன்.5) மட்டும் எந்த அளவிலும் இல்லாத அளவுக்கு 1,116 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மண்டலத்தில் 3 ஆயிரத்தை கடந்துள்ளது. 3 மண்டலங்களில், 2 ஆயிரத்தையும், மேலும் 3 மண்டலங்களில் ஆயிரத்தையும் கடந்துள்ளது. இந்தப் பரவலை தடுக்க மாநகராட்சி புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் குறையவில்லை. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரி பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
மண்டலம் | பாதிப்பாளர்கள் எண்ணிக்கை |
ராயபுரம் | 3,552 |
திரு.வி.க. நகர் | 1,958 |
வளசரவாக்கம் | 996 |
தண்டையார்பேட்டை | 2,470 |
தேனாம்பேட்டை | 2,245 |
கோடம்பாக்கம் | 2,202 |
மணலி | 274 |
சோழிங்கநல்லூர் | 362 |
அடையாறு | 1,094 |
அண்ணா நகர் | 1,784 |
மாதவரம் | 536 |
திருவொற்றியூர் | 731 |
அம்பத்தூர் | 733 |
பெருங்குடி | 365 |
ஆலந்தூர் | 314 |
சென்னை மாவட்டத்தில் 15 மண்டலங்களில் மொத்தம் 19 ஆயிரத்து 826 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 ஆயிரத்து 156 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.