ETV Bharat / state

கரோனாவிலிருந்து மீண்டவரின் வீட்டுக்கதவை தகரத்தால் அடைத்த நகராட்சி அலுவலர்கள்! - chennai corona update

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், அவரது வீட்டின் கதவை தகரத்தால் நகராட்சி அலுவலர்கள் அடைத்ததால் இதய நோயாளி உள்பட குடும்பத்தைத் சேர்ந்த நான்கு பேர் உணவுபெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

oe
coe
author img

By

Published : Aug 26, 2020, 1:32 AM IST

சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் ஏம்குமார் (50). இவர் கடந்த 14 நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து நேற்று முன்தினம் (ஆக. 24) வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், பல்லாவரம் நகராட்சி சார்பில் அந்தக் குடியிப்பிலிருந்து நபர்கள் வெளியேறாமல் இருக்க தடுப்பு அமைக்க முயன்றபோது அங்குள்ள குடியிருப்பு வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்நபரின் வீட்டின் கதவை மட்டும் தகரத்தைக் கொண்டு நகராட்சி அலுவலர்கள் முழுவதுமாக அடைத்தனர். அப்போது, குமாரின் குடும்பத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர் உள்பட நான்கு பேர் இருப்பதால் அவசரநிலைக்கு வெளியே செல்ல முடியாது என்றும் முதல் மாடி என்பதால் ஜன்னல் வழியில்கூட உணவுப்பொருள்களைப் பெற முடியாது என்றும் நகராட்சி அலுவலர்களிடம் கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் அதை மறுத்து வீட்டின் கதவு முழுவதும் தகரத்தால் மூடி சென்றுள்ளனர். இதை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கரோனாவால் பாதிக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காமல் கரோனா சிகிச்சை முடிந்த பிறகு நகராட்சி அலுவலர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத வகையில் கதவை அடைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.