சென்னை : பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், “ தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 14 ஆயிரத்து 644 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 36 நபர்களுக்கும், டெல்லியில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் உத்தரகாண்டில் இருந்து வந்த ஒருவருக்கும் என 39 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 51 லட்சத்து 63 ஆயிரத்து 133 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 34 லட்சத்து 54 ஆயிரத்து 470 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 48 நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 6 என உயர்ந்துள்ளது.
சென்னையில் 19 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 8 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் மூன்று நபர்களுக்கும் திருவள்ளூரில் மூன்று நபர்களுக்கும் விழுப்புரத்தில் இரண்டு நபர்களுக்கும் தூத்துக்குடியில் ஒருவருக்கும் என மொத்தம் 37 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 222 நபர்களும் செங்கல்பட்டில் 121 நபர்களும் கோயம்புத்தூர் 17 நபர்களும் காஞ்சிபுரத்தில் 15 நபர்களும் திருவள்ளூரில் 15 நபர்களும் என அதிகபட்சமாக சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 14 மாவட்டங்களில் நோய்த்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’ எனத்தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு