தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 19 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர்.
ஜுன் 30ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கரோனா தொற்றானது கட்டுக்குள் வரும் என்கிற நம்பிக்கையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை தீவிரமாகப் பணியாற்றி வந்தது.
ஆனால், கரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
ஆகையால், கரோனா தொற்று பரவாமல் இருக்க மக்கள் பாதுகாப்பு முகக்கவசங்கள் பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் தற்கொலை