ETV Bharat / state

சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த 5 பேருக்கு கரோனா! - சிறப்பு விமானம் மூலம் வந்தவர்களுக்கு கரோனா

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jul 22, 2020, 2:11 AM IST

உலகத்தின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இவர்கள் 'வந்தே பாரத்' என்ற திட்டத்தின் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, துபாய், ஜப்பான், கொரியா, மியான்மார், மஸ்கட், பிலிப்பைன்ஸ் போன்ற 20 நாடுகளில் இருந்து இதுவரை 38 ஆயிரத்து 97 பேர் வந்தனர்.

இவர்கள் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். கரோனா தொற்று இல்லாமல் 14 நாள் தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 690 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 420 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில், முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் சவுதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த 4 பேருக்கும், வளைகுடா நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் என 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பாதிப்பு எண்ணிக்கை 695ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.