சென்னை: சுகாதாரத்துறை இன்று (செப்.20) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதியதாக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 493 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 1,661 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 45 லட்சத்து 51ஆயிரத்து 169 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 26 லட்சத்து 47 ஆயிரத்து 41 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 984 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் 623 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 94ஆயிரத்து 697 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகளும் என மேலும் 23 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 370 என உயர்ந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 232 நோயாளிகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 215 நோயாளிகளும், ஈரோடு மாவட்டத்தில் 131 நோயாளிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 114 நோயாளிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 103 நோயாளிகளும் புதியதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்தப் பாதிப்பு விவரம்:
சென்னை - 5,47,705
கோயம்புத்தூர் - 2,40,460
செங்கல்பட்டு - 1,67,901
திருவள்ளூர் - 1,17,094
ஈரோடு - 1,00,811
சேலம் - 97,364
திருப்பூர் - 92,125
திருச்சிராப்பள்ளி - 75,404
மதுரை - 74,335
காஞ்சிபுரம் - 73,563
தஞ்சாவூர் - 72,667
கடலூர் - 63,039
கன்னியாகுமரி - 61,499
தூத்துக்குடி - 55,706
திருவண்ணாமலை - 53,983
நாமக்கல் - 50,049
வேலூர் - 49,190
திருநெல்வேலி - 48,689
விருதுநகர் - 45,918
விழுப்புரம் - 45,251
தேனி - 43,343
ராணிப்பேட்டை - 42,874
கிருஷ்ணகிரி - 42,534
திருவாரூர் - 39,786
திண்டுக்கல் - 32,693
நீலகிரி - 32,391
கள்ளக்குறிச்சி - 30,728
புதுக்கோட்டை - 29,529
திருப்பத்தூர் - 28,795
தென்காசி - 27,237
தருமபுரி - 27,312
கரூர் - 23,417
மயிலாடுதுறை - 22,541
ராமநாதபுரம் - 20,287
நாகப்பட்டினம் - 20,214
சிவகங்கை - 19,676
அரியலூர் - 16,606
பெரம்பலூர் - 11,858
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,025
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: ‘தமிழகத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்’ - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!