ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 1,578 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,578 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 1,578 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,578 பேருக்கு கரோனா
author img

By

Published : Oct 2, 2021, 11:49 PM IST

சென்னை: சுகாதாரத்துறை இன்று (அக்.2) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 855 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் 1,578 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 64 லட்சத்து 89 ஆயிரத்து 759 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் தமிழ்நாட்டிலிருந்த 26 லட்சத்து 66 ஆயிரத்து 964 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 46 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,607 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 14 ஆயிரத்து 291 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் 8 நோயாளிகளும் அரசு மருத்துவமனைகளில் 16 நோயாளிகளும் என 24 நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 627 என உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 188 நபர்களுக்கும் கோவையில் 163 நபர்களும் அதிக அளவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: T23 புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.