ETV Bharat / state

'கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது'  ராதாகிருஷ்ணன்

ஐஐடியில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்ற இடங்களில் அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

author img

By

Published : Apr 30, 2022, 8:24 PM IST

கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது -மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உலக கால்நடை தினம் கொண்டாடப்பட்டது. இதில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டுத்துறை ஆணைய செயலர் ஆனந்த்குமார், கூடுதல் அரசு தலைமை செயலாளர் ஜவஹர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், " 70 விழுக்காடு நோய்கள் விலங்குகள் மூலம் மனிதருக்கு பரவுகிறது. ஆகவே விலங்குகளிடம் இருந்து நோய்கள் மனிதர்களுக்கு பரவாமல் இருக்க கால்நடை மருத்துவர்கள் தடுப்பு மருந்தைகளை கண்டறிந்து வழங்க வேண்டும்.

சென்னை ஐஐடியில் கரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக 7,300 பேரை பரிசோதனை செய்ததில் 196 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐஐடியிலிருந்து வெளியில் பரவலாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நேற்று முதல் தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கிவிட்டது. பொதுமக்கள் ஒத்துழைப்பால் கரோனா உயிரிழப்புகள் இல்லை. குறைத்துள்ளோம்.

பொதுத் தேர்வின் போது மாணவர்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தொடர்பாக பொது சுகாதார இயக்குநரிடம் ஆலோசித்து வாழிகாட்டுதல்கள் வழங்கப்படும். அனைத்து மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கூட்டம் சேர்ந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.