சென்னையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,576இல் இருந்து 11,125ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று கரோனாவால் ஏழு பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16,277இல் இருந்து 17,082ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது, களப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கரோனா நோயை விரைந்து கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட 88% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை'