ETV Bharat / state

கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம் - டாக்டர். ராதாகிருஷ்ணன்

சென்னை : அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இதனால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றும் கரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி டாக்டர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டாக்டர்.ராதாகிருஷ்ணன்
டாக்டர்.ராதாகிருஷ்ணன்
author img

By

Published : May 3, 2020, 4:41 PM IST

Updated : May 3, 2020, 6:27 PM IST

கரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.

அப்போது பேசிய டாக்டர். ராதாகிருஷ்ணன், "கிருமி நாசினி தெளிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்படுகிறது. பொதுமக்கள் முகக்கவசம் கிடைக்கவில்லை என்றால், சாதாரண துணியை இரண்டாக மடித்து பயன்படுத்திக்கொள்ளலாம் என தொடர்ந்து அறிவுறுத்துவருகிறோம்.

அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதிக சோதனைகள் செய்யப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை.

சளி, காய்ச்சல் உள்ளவர்கள் தாமாக முன் வந்து பரிசோதனை செய்யவேண்டும். தன்னார்வலர்கள் 10 நாள்களுக்கு ஒரு முறை தங்களை வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும். தங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என்று யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

உணவு உள்ளிட்ட பொருள்களை டெலிவரி செய்பவர்களையும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள், சிறுவர்கள், நோயுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிறரிடம் பேசும்போது எக்காரணம் கொண்டும் யாரும் முகக்கவசத்தை விலக்கக் கூடாது. மருத்துவமனைகளில் தகுந்த இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் தடுக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களது வீடுகளை முழுமையாக சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது" என தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஆணையர் பிரகாஷ், "சென்னையில் இருக்கும் மக்கள், மற்ற மாவட்டம் மற்றும் மாநிலகளுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி சீட்டு வழங்குவதற்கு என சிறப்பு இணையதளம் உள்ளது. அதில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். வீடுகளில் வேலை செய்யும் நபர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் அனுமதிச் சீட்டு வாங்கித்தரவேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் பார்க்க: விமான எரிபொருள் விலை கடும் சரிவு!

Last Updated : May 3, 2020, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.