சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேலும் மூன்று மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்ததால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றொருவர் ராயபுரத்திலிருந்து வந்து செல்பவர் என்பதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
ஏற்கனவே இருதயவியல் துறையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கும், செவிலியர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, இருதயவியல் சிகிச்சைக்கான கட்டடம் மூடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கும், உயர் நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் ஒருவருக்கும், காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 105 பேருக்கு கரோனா உறுதி