செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் சிலருக்கு மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதன் காரணமாக, அவர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் ஐந்து காவலருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் சங்கர் நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, கரோனா கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டது.
இப்பரிசோதனையின் முடிவில், மேலும் இரண்டு காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இரு காவலர்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரோனா அச்சம் காரணமாக சங்கர் நகர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:சோதனைச்சாவடியில் பணிபுரிந்த காவலருக்கு கரோனா தொற்று உறுதி