சென்னையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநகராட்சி அனைத்து பகுதிகளும் முகக்கவசம் வழங்குவது கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை சமூக களப்பணி திட்டம் என்று ஜூன் மாதம் 19ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தன்னார்வ அமைப்புகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நாட்டியம் ஆடுவது, இசைக் கச்சேரி, நாடகம் போன்ற பல்வேறு விதமான கலைகளை பயன்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் கோடம்பாக்கத்தில் சென்னை மாநகராட்சியுடன் சகோதரன் தன்னார்வலர் அமைப்பு இணைந்து, திருநங்கைகள் கோலாட்டம் நடனமாடி மக்களிடையே கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நடனத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலாட்டம் குழுவின் பிரியங்கா, “எங்கள் குழு 15 வருடங்களாக பல்வேறு இடங்களில் கோலாட்டம் நடனம் அரங்கேற்றிள்ளோம். இந்தக் கரோனா நேரத்தில் எங்கள் நடனம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சகோதரன் தன்னார்வலர் அமைப்புடன் இணைந்து நடனம் அரங்கேற்றினோம். எங்களுக்கு வாய்ப்பளித்த மாநகராட்சிக்கு மற்றும் சகோதரன் அமைப்புக்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க....வனிதா விஜயகுமார் குறித்து அவதூறு பரப்பிய சூர்யா தேவி கைது