சென்னை கொளத்தூரில் உள்ள பாலாஜி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கொரோனா வைரஸ் பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திய வண்ணம், காய்ச்சல் வரும்முன் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது போன்ற கோஷங்களை எழுப்பியவாறு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிச் சென்றனர்.
பேரணி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்ட கொரோனா வைரஸ் பற்றிய சிறப்பு விழிப்புணர்வுப் பாடல் பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் பாடப்பட்டது. இதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுப் பேரணி இதுவாகும்.
இதையும் படிங்க: