மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று(மே 12) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 853 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 30 ஆயிரத்து 336 நபர்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த 19 நபர்களுக்கும் என 30 ஆயிரத்து 355 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 40 லட்சத்து 3 ஆயிரத்து 69 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 லட்சத்து 68 ஆயிரத்து 864 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 735 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் 19 ஆயிரத்து 508 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 79 ஆயிரத்து 658ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 131 நோயாளிகளும், அரசு மருத்துவமனைகளில் 162 நோயாளிகளும் என 293 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 471ஆக உயர்ந்துள்ளது. எந்தவித இணை நோய்களும் இல்லாத 67 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஒரு வயது குழந்தையும் உயிரிழந்தது.
சென்னையில் புதிதாக 7,564 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 4,12,505
செங்கல்பட்டு - 1,04,812
கோயம்புத்தூர் - 1,03,184
திருவள்ளூர் - 74,660
சேலம் - 48,596
காஞ்சிபுரம் - 46,410
கடலூர் - 35,167
மதுரை - 42,237
வேலூர் - 33,044
தஞ்சாவூர் - 31,599
திருவண்ணாமலை - 28,603
திருப்பூர் - 33,180
கன்னியாகுமரி - 28,406
திருச்சிராப்பள்ளி - 31,973
தூத்துக்குடி - 32,140
திருநெல்வேலி - 32,879
தேனி - 25,037
விருதுநகர் - 24,121
ராணிப்பேட்டை - 25,190
விழுப்புரம் - 23,819
ஈரோடு - 29,346
நாமக்கல் - 18,811
திருவாரூர் -18,309
திண்டுக்கல் - 19,230
புதுக்கோட்டை - 15,902
கள்ளக்குறிச்சி - 14,681
நாகப்பட்டினம் - 19,923
தென்காசி - 14,734
நீலகிரி - 11,475
கிருஷ்ணகிரி - 20,235
திருப்பத்தூர் - 13,091
சிவகங்கை - 10,315
தருமபுரி - 12,284
ராமநாதபுரம் - 10,933
கரூர் - 10,445
அரியலூர் - 6,718
பெரம்பலூர் - 3,895
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
ரயில் மூலம் வந்தவர்கள் - 428