சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 883 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,531 பேருக்குக் கரோனா தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தமாக தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 65 லட்சத்து 39 ஆயிரத்து 642 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 26 லட்சத்து 68 ஆயிரத்து 495 நபர்களுக்கு தொற்றுப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில், 16 ஆயிரத்து 972 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 1,582 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் மூலமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 26 லட்சத்து 15 ஆயிரத்து 873 என உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று (அக்.3) தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 650 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை - 5,50,389
கோயம்புத்தூர் - 2,42,988
செங்கல்பட்டு - 1,69,081
திருவள்ளூர் - 1,17,972
ஈரோடு - 10,21,188
சேலம் - 98,291
திருப்பூர் - 93,268
திருச்சிராப்பள்ளி - 76,218
மதுரை - 74,687
காஞ்சிபுரம் - 74,056
தஞ்சாவூர் - 73,727
கடலூர் - 63,499
கன்னியாகுமரி - 61,847
தூத்துக்குடி - 55,902
திருவண்ணாமலை - 54,424
நாமக்கல் - 50,776
வேலூர் - 49,439
திருநெல்வேலி - 48,959
விருதுநகர் - 46,088
விழுப்புரம் - 45,506
தேனி - 43,443
ராணிப்பேட்டை - 43,100
கிருஷ்ணகிரி - 42,950
திருவாரூர் - 40,479
திண்டுக்கல் - 32,838
நீலகிரி - 32,846
கள்ளக்குறிச்சி - 31,005
புதுக்கோட்டை - 29,803
திருப்பத்தூர் - 29,051
தென்காசி - 27,288
தர்மபுரி - 27,789
கரூர் - 23,649
மயிலாடுதுறை - 22,916
ராமநாதபுரம் - 20,373
நாகப்பட்டினம் - 20,550
சிவகங்கை - 19,890
அரியலூர் - 16,710
பெரம்பலூர் - 11,965
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,025
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: கைதான ஷாருக்கான் மகனுக்கு மருத்துவப் பரிசோதனை