ETV Bharat / state

தடகள பயிற்சியாளர் நாகராஜனிடம் போலீசார் விசாரணை - நாகராஜனிடம் போலீசார் விசாரணை

சென்னை: பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை, அவர் பயிற்சி அளித்த விளையாட்டு மைதானம் உள்பட பல இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

athletic trainer nagarajan
athletic trainer nagarajan
author img

By

Published : Jun 5, 2021, 7:31 PM IST

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜனை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மே 28ஆம் தேதி கைதான நாகராஜன், ஜூன் 11 வரை நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், மேலும் விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

தடகள பயிற்சியாளர் நாகராஜனிடம் விசாரணை

இதனை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், பயிற்சியாளர் நாகராஜனை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. நேற்று (ஜூன்4) போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜனை, அவர் பயிற்சி அளித்த பச்சையப்பன் கல்லூரி மைதானம் உள்பட பல இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று காவல் துறையினர் இன்று (ஜூன்5) விசாரணை நடத்தினர்.

சமூக வலைதளத்தில் பாலியல் புகார்கள்

பிரபல தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் சென்னை பாரிமுனையில் பிரைம் ஸ்போட்ஸ் அகடாமி என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தடகள பயிற்சியை அளித்து வந்தார். விளையாட்டு பயிற்சியின் போது வீராங்கனைகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக நாகராஜன் மீது சமூக வலைத்தளத்தில் புகார்கள் வெளியாகின.

இச்சூழலில், நாகராஜன் மீது சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரும் பரபரப்பு புகாரளித்தார். அதில், பல சமயங்களில் பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாகக் கூறி, பாலியல் சீண்டலில் நாகராஜன் ஈடுபட்டதாகத் தெரிவித்திருந்தார்.

பயிற்சி பெற்ற வீராங்கனைளிடம் விசாரணை?

இந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நாகராஜனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.

புகார் அளித்த இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து நாகராஜனின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக, நாகராஜனிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நேரில் அழைத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பாலியல் தொல்லை: ராஜகோபாலன் ஜாமீன் மனு ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.