சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள், பொதுமக்கள் உணவருத்துவதற்காக உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வார் அந்த உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உணவின் தரத்தை சரிபார்த்த அவர், கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றுமாறு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.