அரசு கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவரின் படம் சர்ச்சைக்குரிய வகையில் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி அடைந்த கல்வித் துறை, அதுபோன்ற பதிவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று (டிசம்பர் 28) ஆலோசனையும் நடைபெற உள்ளது.
கல்வித் துறையில் அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது, பின்னர் அதைத் திரும்பப் பெறுவது, அரசாணை வெளியிடுவது, அதனைத் திரும்பப் பெறுவது எனப் பலவகையான குழப்பங்கள் நடந்துவருகின்றன.
பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்து ஏற்கனவே பாடப்புத்தகங்களில் வெளியானதற்கு அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களைச் சந்தித்தது தமிழ்நாடு அரசு. தற்போது திருவள்ளுவரின் உடை முழுவதையும் காவிமயமாக்கி அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் திருவள்ளுவரின் படத்திற்கு காவிச்சாயம் பூசப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனவே இதற்கு முழுப் பொறுப்பு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சேரும் எனப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’இந்துத்துவ சக்திகளின் கைப்பாவையாக செயல்படும் அதிமுக’ - சாடும் வைகோ