ETV Bharat / state

'தொடரும் தற்கொலை - ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை விரைவில் இயற்றுங்கள்' - அன்புமணி

தற்கொலைகள் தொடர்ந்துகொண்டிருப்பதால் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை விரைவாக இயற்றுமாறு மாநிலங்களவை உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி கோரிக்கைவிடுத்துள்ளார்.

தொடரும் தற்கொலை
தொடரும் தற்கொலை
author img

By

Published : Aug 21, 2021, 1:55 PM IST

சென்னை: இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:

  • விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்டதற்குப் பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது!
  • தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களின் கேடுகள், அதனால் நிகழ்ந்த தற்கொலைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு பாமக வலியுறுத்திவந்ததன் பயனாக கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது செல்லாது என அறிவிக்கப்பட்டது பெரும் பின்னடைவு!
  • ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே ஆன்லைன் சூதாட்டத்திற்கு மக்களை அழைக்கும் விளம்பரங்கள் குவிகின்றன. தடை விலகிய 16 நாள்களில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பதிலிருந்து நிலைமையின் தீவிரத்தை உணரலாம்!
  • ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் மக்கள் இரையாகக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்வதற்கான திருத்தப்பட்ட சட்ட முன்வரைவை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
  • இளைஞர் பச்சையப்பனின் தற்கொலை மற்றவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் எவரும் ஆன்லைன் சூதாட்டம் என்ற மாயவலையில் சிக்கிவிடாமல் கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

இதையும் படிங்க: செந்தில்பாலாஜியின் குற்றச்சாட்டு உண்மையா? - நிச்சயம் விளக்குவதாக தங்கமணி உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.