ETV Bharat / state

ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜன் தொடர்ந்து பின்னடைவு

சென்னை: ஆவடி தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜன் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு தொடர்ந்து பின்னடைவு!

author img

By

Published : May 2, 2021, 12:37 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 131 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 102 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக அமைச்சர்கள் பலர் தங்கள் தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் ஆவடி தொகுதியில் அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். 2500-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இவர் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இங்கு திமுக சார்பாக போட்டியிட்ட சா.மு. நாசர் தொடக்கத்திலிருந்து முன்னிலை வகித்துவருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.