சென்னை: அய்யப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர், ரச்சிதா மகாலட்சுமி. இவர் பிரிவோம் சந்திப்போம், பிக்பாஸ், சரவணன் மீனாட்சி உள்ளிட்டப் பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக நடித்து பிரபலமடைந்தவர்.
கடந்த 2013ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்தபோது, அதே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தினேஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த நான்கு வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கணவர் தினேஷ் தனக்கு போன் செய்து ஆபாசமாகப் பேசி தொல்லை கொடுத்து வருவதாக நடிகை ரச்சிதா எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கணவர் தினேஷ் தொடர்ச்சியாக தனக்கு போன் செய்து தேவையில்லாத விஷயத்தை ஆபாசமாகப் பேசி, தொல்லை கொடுப்பதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் இருவரையும் வரவழைத்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளுமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரூரில் தொடரும் சாதிய வன்கொடுமை: போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு!
இதே போல், சமீபத்தில் விஷ்ணுகாந்த், சம்யுக்தா இருவரின் பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான விஷ்ணுகாந்த், சம்யுக்தா, இருவரும் சீரியலில் சேர்ந்து நடித்த சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் காதலித்தனர். அதன் பின்பு திருமணம் செய்து கொண்டனர். பின்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் திருமணம் ஆன சில நாட்களிலேயே தனது சமுக வலைதளங்களில் பதிவிட்ட புகைப்படங்களை டெலிட் செய்தனர். அன் ஃபாலோவும் செய்து கொண்டனர். இதனையடுத்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம்சுமத்தி வந்தனர்.
இந்நிலையில் விஷ்ணுகாந்த் ஒரு செய்தி சேனலில் பேட்டி அளித்தார். அதில் அவர் சம்யுக்தாவை சிலர் தவறாக வழி நடத்துவதாக குற்றம்சுமத்தினார். மேலும் அவர் சம்யுக்தா தொடர்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டார். தன்னை காதலிக்கும்போதே, இன்னொருவரை காதலிப்பது போன்று இருக்கும் அந்த ஆடியோ ஆதாரங்கள் அதிர்ச்சியை அளித்தன.
பின்பு, சம்யுக்தா அளித்த பேட்டியில் 'விஷ்ணுகாந்துக்கு சுத்தமாக பாசமில்லை, அவருக்கு நான் ஒரு மிஷின் போல் தான் தெரிந்தேன். அவர் எனக்குத் தொடர்ச்சியாக ஆபாசப் படங்களைக் காட்டி இது போன்று நெருக்கமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்' என்றார். மேலும் இது போன்ற அதிர்ச்சித் தகவலை அவர் தெரிவித்தார்.
மேலும் சின்னத்திரை பிரபலங்களுக்கு தொடர்ச்சியாக இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவதால் பொது மக்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்களை பித்துபிடிக்க வைக்கும் 'பேச்சுலர்' பட நடிகை!