ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து - மீண்டும் விசாரணை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
author img

By

Published : Oct 17, 2022, 9:18 PM IST

சென்னை: சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார்.

அப்போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை எனக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென, தமிழக அரசுத்தரப்பில் ஆஜாரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், இணை ஆணையரும், உதவி ஆணையரும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல்; சென்னை சத்யமூர்த்தி பவனில் ஏற்பாடுகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.