சென்னை: கடந்த ஆண்டு சென்னை ஐஐடி வளாகத்தில் ஒரே இடத்தில் நாய்களை அடைத்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில் 186 நாய்களை சென்னை ஐஐடி வளாகத்திற்குள் ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததும், 45 நாய்கள் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் தெரு நாய்கள் பராமரிப்பு குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து சிட்டிசன்ஸ் ஃபார் அனிமல்ஸ் ரைட்ஸ் என்ற தனியார் அமைப்பு சென்னை ஐஐடிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிங்க: ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!