கரோனா வைரஸால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் அமைப்பது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது.
இருப்பினும், தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தப் பரவலைத் தடுக்கும் வகையில், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் தெரு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது.
இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தனிமைப்படுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கத் தொடங்கியது.
அதன்படி, சென்னையில் முன்னதாக 64 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 61ஆக குறைந்துள்ளது. அதன்படி மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரத்தை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி,
தண்டையார்பேட்டை - 24
திரு.வி.க. நகர் - 3
அம்பத்தூர் - 2
அண்ணா நகர் - 8
தேனாம்பேட்டை - 3
கோடம்பாக்கம் - 15
பெருங்குடி - 2
சோழிங்கநல்லூர் - 4 என்ற எண்ணிக்கையில், தற்போது கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன.