சென்னை: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று (ஏப்.11) மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி, சுகாதாரத் துறைஇணைந்து முகக்கவசம் வழங்குதல், சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 931 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை, தற்போது ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 145, கோடம்பாக்கத்தில் 126 அண்ணாநகரில் 124 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா விதி மீறல்கள் - ரூ.500 அபராதம் விதித்த பெரு நகராட்சி ஆணையர்