ETV Bharat / state

பயங்கரவாதிகளுடன் தொடர்பு? சென்னையில் 3 பேரிடம் விசாரணை - பயங்கரவாதிகளுடன் தொடர்பு

சென்னையில் சட்டவிரோதமாக சிம்பாக்ஸ் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தொடர்பு கொண்ட மூன்று இளைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் 3 பேரிடம் விசாரணை
சென்னையில் 3 பேரிடம் விசாரணை
author img

By

Published : Nov 24, 2022, 8:27 AM IST

சென்னை அமைந்தகரை எம்.எம் காலனி ஏ பிளாக் மற்றும் பி.பி தோட்டம் பகுதியில் இருந்து அதிகப்படியான வெளிநாட்டு அழைப்புகள் செல்வதாகவும், ஆனால் அவை உள்ளூர் அழைப்புகள் போல் காட்டுவதால் தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு நிறுவனம் சார்பில் மத்திய அமைப்பு விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும் இந்த மோசடியால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. அதனடிப்படையில் மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் அமைந்தகரை போலீசாரின் உதவியுடன் சம்பவ இடத்திலுள்ள பூட்டப்பட்ட இரு வீட்டை அதிரடியாக நேற்று சோதனை நடத்தினர்.

சோதனையில் அந்த வீட்டில் இருந்து 4 சிம்பாக்ஸ் மற்றும் 120 சிம்கார்டுகள், 2 ரூட்டர்கள், மோடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தபோது ஜாகீர் ஹுசைன் என்பவர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது.

வீட்டு உரிமையாளர் மூலம் ஜாகீர் ஹுசைனை மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகள் செல்போனில் தொடர்புகொண்டு வரவழைத்து, அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெரியமேடு பகுதியில் வசித்து வரும் தனது நண்பர்களுக்காக இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததாக ஜாகீர் ஹுசைன் கூறினார். இதையடுத்து பெரியமேடு பகுதியில் உள்ள ஊத்துக்காட்டான் தெருவில் வசித்து வந்த ஜாகீர் ஹுசைனின் நண்பர்களான இருவரை அதிகாரிகள் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்டுள்ள மூவரும் சிம்பாக்ஸ் மூலம் வெளிநாட்டு அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளதால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டிற்கு பேச விரும்பும் நபர்களுக்கு சிம்பாக்ஸ் மூலமாக உள்ளூர் அழைப்புகள் போல் மாற்றிகொடுத்து இவர்கள் பணம் வசூலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே ஜாகீர் ஹுசைன் மீது இதே போன்ற மோசடி வேலூரில் பதிவாகியுள்ளது.

கோவை மற்றும் மங்களூரு ஆகிய இடங்களில் பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் சிம்பாக்ஸ் பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகள் போல மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களை தீட்டும் செயலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிடிபட்ட மூவரிடம் மத்திய அமைப்பு அதிகாரிகளும், சைபர் கிரைம் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹிஜாவூ நிறுவன மோசடி: 21 இடங்களில் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.