ETV Bharat / state

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு? வரும் 1ஆம் தேதி ஆலோசனை - வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆகஸ்ட் 1ல் ஆலோசனை நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார்  எண் இணைக்கும் பணி தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

author img

By

Published : Jul 30, 2022, 1:28 PM IST

சென்னை: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் நிலையில், இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவிக்கையில்,

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள், ஆகஸ்ட் 1ம் தேதியன்று தொடங்கவுள்ளது. இந்தப் பணிகளை 2023-ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகப்பெரிய பணியாகும்.

இந்தப் பணிக்கு அரசியல் கட்சிகளின் முழு ஒத்துழைப்பு அவசியமாகும், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை வெற்றிகரமாக நடத்த கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்படும்.

மற்றொரு முக்கிய அம்சமாக, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, இந்தப் பணிகள் அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட உள்ளது. தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

தற்போதுள்ள நிலவரப்படி, 18 வயது பூர்த்தியான பிறகே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும், இந்த பெயர் சேர்ப்புப் பணி, ஜனவரி 1ஆம் தேதியை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி 1ஆம் தேதிக்குள் யாருக்கெல்லாம் 18 வயது பூர்த்தி ஆகிறதோ அவர்களே வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களைச் சேர்க்கலாம்.

ஆனால், ஜனவரி 2ஆம் தேதியன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டால், அவர் அடுத்ததாக நடைபெறக் கூடிய சுருக்க முறைத் திருத்தப் பணிகளின் போதுதான் பட்டியலில் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க முடியும், ஒருநாள் பின்தங்கி இருப்பதால் ஓராண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதைத் தவிர்க்க, ஒரு ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் (மூன்று மாதங்கள் இடைவெளியில்) வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஜனவரி1ஆம் தேதி, ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய நாட்களுக்குள் 18 வயது பூர்த்தி ஆகிவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இந்தப் புதிய நடைமுறை பற்றியும் அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

இந்த மாதத்தில்தான் வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளும் நடைபெறவுள்ளது, எனவே, கிராம சபைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பணிகளும், ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.

அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தை நடத்துவதற்கு முன்பதாக, கூட்டம் குறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை அந்தந்த கட்சியின் அலுவலகத்துக்கு அனுப்புவது வழக்கம். அதுபோலவே அதிமுக வின் தற்போதைய தலைமை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தை ஏற்று யார் வருகிறார்களோ, அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று, ஒவ்வொரு கூட்டத்துக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் எப்படி கடிதம் அனுப்பி வைக்கப்படுமோ, அதுபோன்றே இப்போதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - இந்தியத் தேர்தல் ஆணையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.